100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

சூரிய கிரகணம் என்பது வானில் நிகழும் ஒரு அற்புதமான நிகழ்வு. ஆனால் முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு மிக அரிதாகவே கிடைக்கும்.
 
இந்த நிலையில் நேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணத்தை முழு அளவில் அமெரிக்க மக்கள் கண்டு ரசித்தனர். 
 
இதற்கு முன்னர் அமெரிக்க மக்கள் 1918ஆம் ஆண்டு பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்தே தற்போது முழு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.
 
எனினும் மேகமூட்டம் காரணமாக தெற்கு கரோலினா மாகாணம் உள்பட சில மாகாணங்களில் மட்டும் முழு சூரிய கிரகணம் தெரியவில்லை. 
 
ஆயினும் ஒரேகான், சார்லெஸ்டான், தெற்கு கரோலினா உள்பட அமெரிக்காவின் பல பகுதிகளில் தெரிந்த முழு சூரிய கிரகணத்தை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் சூரிய கிரகணத்தை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
 

மூலக்கதை