இந்திய சுதந்திர தின பேரணி நியூயார்க் நகரில் கோலாகலம்

தினமலர்  தினமலர்
இந்திய சுதந்திர தின பேரணி நியூயார்க் நகரில் கோலாகலம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்திய சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பேரணி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில், அமெரிக்க இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாட்டின், 71வது சுதந்திர தினம், 15ல், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள், நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் கூடி, இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடினர்.நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட, அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களில் வசிக்கும், இந்திய அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கானோர், நியூயார்க் நகரில் திரண்டனர். அமெரிக்க
வாழ் இந்தியர்கள் கூட்டமைப்பின் சார்பில், 37வது ஆண்டாக, இந்திய சுதந்திர தின சிறப்பு பேரணி நடந்தது. இதில், பாகுபலி புகழ் நடிகர் ராணா, நடிகை தமன்னா, பிரபல பின்னணி பாடகர் கைலாஸ் கெர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழாவும் நடத்தப்பட்டது. பேரணி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை, நியூயார்க் மேயர், பில் டி பிலாசியோ துவக்கி வைத்தார். ஏராளமானோர் பேரணியில்
பங்கேற்றனர்.

மூலக்கதை