சுவிஸில் சிறிய ரக விமான விபத்து! பலர் பேர் பலி

PARIS TAMIL  PARIS TAMIL
சுவிஸில் சிறிய ரக விமான விபத்து! பலர் பேர் பலி

சுவிட்சர்லாந்து நாட்டில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
சுவிஸின் வாலைஸ் மாகாண தலைநகரான சியோன் நகரில் இருந்து சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று நேற்று பிற்பகல் 1 மணியளவில் புறப்பட்டுள்ளது.
 
விமானம் புறப்பட்டபோது வானம் சீராக இருந்தாலும், காற்று பலமாக வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பறந்துக்கொண்டு இருந்த விமானம் எதிர்பாராத விதமாக Sanetsch Pass என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.
 
விமானம் விழுந்ததும் தீப்பற்றி எரிந்ததால் அதில் பயணம் செய்த 3 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
 
எனினும், உயிரிழந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விமான விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சமீப நாட்களாக சுவிஸில் சிறிய விமான விபத்துக்கள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரத்தில் Graubunden மாகாணத்தில் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியானார்கள்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காண்ட்ஸ்டான் ஏரிக்கு அருகில் சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானார்கள்.
 
இந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயிற்சி விமான விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூலக்கதை