காங்கோவில் கனமழை நிலச்சரிவில் 40 பேர் பலி

தினகரன்  தினகரன்

புனியா : மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசில் நேற்று  முன்தினம் கனமழை பெய்தது. குறிப்பாக நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள இதுரி மாகாணத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்குள்ள டோரா மீனவ கிராமத்தையொட்டிய பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஏரியில் இருந்து கட்டுக்கடங்காத அளவில் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  மீனவ கிராமத்தை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மாகாண கவர்னர்  கேட்டா கூறுகையில், `கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு  ஏற்பட்டது. இறந்த 40 பேரில் 28 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இன்று 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன’ என்றார்.

மூலக்கதை