மகளை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு 12 ஆயிரம் வருடம் சிறை: மலேசிய நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளை பாலியல் தொல்லை செய்த தந்தைக்கு 12 ஆயிரம் வருடம் சிறை: மலேசிய நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

கோலாலம்பூர்: மலேசியாவில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த 36 வயது தந்தையை கைது செய்த போலீஸ் நீதிமன்றம் அவருக்கு 12 ஆயிரம் வருடங்கள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும் என கோரியது.   மலேசியாவை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவர் அவருடைய மனைவியை  விவாகரத்து செய்து  15 வயது மகளும் வசித்து வந்தார். இவருடன் மனைவி இல்லாமலிருந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரையிலான இடைப்பட்ட அந்த நபர் மகளை பலமுறை  பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது அம்மாவிடம் சொல்லியதால் அச்சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அந்த  மோசமான தந்தையை கடந்த 26ம் தேதி மலேசிய போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்போது ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தவரின் வழக்கினை நீதிமன்றம் விசாரித்தது. அந்த நபர் மீது 600க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை படிக்கவே 2 நாள் ஆகிவிட்டதாக இந்த வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டுகளின்படி குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தால் ஒரு குற்றச்சாட்டுக்கு 20 வருடம் தண்டனை என வைத்துக் கொண்டால் அவர் 12 ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

இதனால் இவரது ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது மலேசிய நீதிமன்றம். மலேசியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் இந்த வழக்கு முக்கிய வழக்காக பார்க்கப்பட்டு வருகிறது.

.

மூலக்கதை