இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வை கொலை செய்ய முயன்ற சதியை போலீசார் முன் எச்சரிக்கையாக செயல்பட்டு முறியடித்தனர்.
இங்கிலாந்தில் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. லண்டனில் உள்ள டவுனிங் தெருவில் இவரது பங்களா உள்ளது.

கடந்த மாதம் 28ம் தேதி இங்கிலாந்தின் தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் சகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய 2 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் பிரதமர் தெரசாவை கொல்ல சதி செய்ததாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் இவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் இதை தெரிவித்துள்ளனர்.



சக்தி வாய்ந்த குண்டுகள் தயார் செய்து பிரதமர் இல்லத்தில் வீச முயன்றதாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
போலீசாரின் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் தெரசாவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடந்த 12 மாதங்களில் தெரசாவுக்கு எதிரான இது போன்ற 9 தீவிரவாத சதி செயல்கள் மற்றும் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன என்றார்.

.

மூலக்கதை