ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய பார்லி.யில் ஓரின சேர்க்கை மசோதா நிறைவேற்றம்

சிட்னி: உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் தற்போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கான அனுமதியை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தின் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண அங்கீகாரத்திற்கான மசோதா இரு தினங்களுக்கு முன்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அப்போது அவையில் இருந்த எம்பி டிம் வில்சன், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த தனது ஓரினபாலுறவு காதலர் ரியான் பொலுஜரிடம் அதிகாரப்பூர்வமாக காதலை வெளிப்படுத்தினார்.

 இதை சபாநாயகர் வரவேற்று அவை பதிவேட்டிலும் பதிவு செய்தார். இதை கண்டு எம்பிக்களும், பார்வையாளர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இருவரையும் அனைவரும் வாழ்த்தினர். நாடாளுமன்ற விவாதத்தின் போது காதலை வெளிப்படுத்திய முதல் எம்பி டிம் வில்சன் என அனைவரும் பாராட்டினர்.

.

மூலக்கதை