லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு

தினமலர்  தினமலர்
லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு

லண்டன்; பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரி்ட்டனின் தலைநகர் லண்டனில் ஆக்ஸ்போர்டு டியூப் பாதாள ரயில்வே ஸ்டேனில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதில் பெண் ஒரு காயமடந்ததாக கூறப்படுகிறது. துபபாக்கிச்சூடு சத்தம் கேட்ட அங்கிருந்த பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலறியடித்து ரயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் உஷாராயினர்.

பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீஸ் வேன்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டன. மேலம் அருகில் பான்ட் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் , மற்றும், ஆக்ஸ்போர்ட் சர்க்ஸ் ஸ்டேசன், லண்டன் ரயிவே ஸ்டேசன் ஆகிய ஸ்டேசன்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அங்கிருந்த பயணிகள் பத்திர வெளியேற்றப்பட்டு மூடப்பட்டன. எனினும் ரயில் போக்குவரத்து அங்கு நடந்து கொண்டிருந்தது.
போலீசார் பயங்கரவாத எதிர்ப்படை கமாண்டோக்கள் ரயில் நிலையங்களை சுற்றி வளைத்து பாதுகாப்பபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் லண்டன் நகர் முழுவதும் பரபரப்பு காணப்படுகிறது.

கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு எகிப்து மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 235 பேர் பலியாயினர். இந்த சூழ்நிலையில் லண்டனில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


3 ரயில் நிலையங்கள் மூடல்



துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்த லண்டலில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

மூலக்கதை