சீன கரன்சிக்கு பாக்., மறுப்பு

தினமலர்  தினமலர்
சீன கரன்சிக்கு பாக்., மறுப்பு

இஸ்லாமாபாத்: சீனாவின் யுவான் கரன்சியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க, பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இதனால், சீனா அதிருப்தியில் உள்ளது.
சீனா - பாகிஸ்தான் பொருளாதார திட்டப்படி (சிபிஇசி), பாகிஸ்தானின் குவாடர் தடையில்லா மண்டலத்தில் சீனா பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களில் யுவான் கரன்சியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்தது. இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையில், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை

அப்போது, பொருளாதார இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி யுவானை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் நிதியமைச்சகம் மற்றும் அந்நாட்டு தலைமை வங்கி எதிர்ப்பை தொடர்ந்து, யுவானை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. யுவானுக்கு அனுமதி தராததால், பாகிஸ்தான் மீது சீனா அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

மூலக்கதை