இந்தியா - அமெரிக்க நட்பிற்கு ஜி.இ.எஸ். -17 மாநாடு சாட்சியாய் அமையும்

தினமலர்  தினமலர்
இந்தியா  அமெரிக்க நட்பிற்கு ஜி.இ.எஸ். 17 மாநாடு சாட்சியாய் அமையும்

வாஷிங்டன்: இந்தாண்டு இந்தியாவில் நடக்கும் ஜி.இ.எஸ். -17 மாநாடு இந்தியா - அமெரிக்க நட்புறவுக்கு சாட்சியாய் அமையும் என இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் இந்தியாவில் உலக பொருளாதார உச்சி மாநாடு (ஜி.இ.எஸ்) -17 வரும் நவ.,28-30 தேதிகளில் நடக்கிறது. இதில் அமெரிக்கா சார்பில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா கலந்து கொள்கிறார். இதற்கான அழைப்பை பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது டிரம்பிடம் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இவாங்கா தெரிவித்ததாவது :‛‛ பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்திருந்தபோது, அமெரிக்கா ஒரு சிறந்த நாட்டை நண்பனாக கொண்டுள்ளதை உணர்த்தியது. அமெரிக்கா இந்தியாவுடனான பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேம்படுத்த நினைக்கிறது. அதற்காக ஜி.இ.எஸ் மாநாடு ஒரு பகுதியாக அமையும். '' என கூறினார்.

மூலக்கதை