குற்ற வழக்குகளில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குற்ற வழக்குகளில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் மறுப்பு

லண்டன்: இந்தியாவில் குற்றவழக்குகளில் சிக்கி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த  3 இந்தியர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற லண்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டது.   இது தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து நிராகரித்து விட்டது. கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய முக்கிய குற்றவாளி சஞ்சீவ் குமார் தற்போது இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு மத்திய  அரசு விடுத்த கோரிக்கை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்தியாவில் சித்ரவதை செய்ய  வாய்ப்புள்ளது.

எனவே சஞ்சீவை நாடு கடத்தும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றார். இதே போல் இந்தியாவில் வங்கியில் ரூ.

20 லட்சம் மோசடி செய்து விட்டு  இங்கிலாந்துக்கு தப்பிய ஜிதேந்தர்-ஆஷா ராணி தம்பதியையும் இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தொழிலதிபர் மல்லையாவை  நாடு கடத்தக் கோரும் இந்திய அரசின் மனுவும் இந்த நீதிமன்றத்தில் தான் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை