ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா-பாக்., இன்று மோதல்

தினமலர்  தினமலர்
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியாபாக்., இன்று மோதல்

தாகா: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் ‛சூப்பர்-4' சுற்று போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று(அக்.,21) மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக ‛டிரா' செய்தால் கூட, இந்திய அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை