இந்தியாவுக்கு நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா திகழும்: டில்லர்சன்

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா திகழும்: டில்லர்சன்

வாஷிங்டன்: சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு உறுதியான நட்பு நாடாக அமெரிக்கா இருக்கும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

அத்துமீறல்


அடுத்த வாரம் அவர் இந்தியா வர உள்ள நிலையில், வாஷிங்டன்னில் நடந்த கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: இந்தியாவை போல் வளர்ந்து வரும் சீனா, சர்வதேச அளவில் பல நேரங்களில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. ஆனால், இந்தியா மற்ற நாடுகளின் இறையாண்மையை மதித்து, குறிப்பிட்ட வரையறைக்குள் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தென் சீன கடலில், சீனாவின் அத்துமீறல் சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. இதற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக நிற்க வேண்டும்.

தேவை


விதிகளுக்கு எதிரான செயல்பாடு, மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல், அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளுக்கு பின்னடைவாக நடக்கும் சீனாவின் செயலுக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது. நிலையற்ற இந்த காலகட்டத்தில், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு நிலையான நட்பு நாடு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில், சர்வதேச நிலைத்தன்மை, அமைதி, வளர்ச்சி ஆகிய கொள்கைகள் அடிப்படையில், அந்த நட்புநாடாக அமெரிக்கா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை