குண்டு வெடித்து 7 போலீஸ் பலி

தினமலர்  தினமலர்

கராச்சி: பாகிஸ்தானில், குண்டு வெடித்ததில், ஏழு போலீசார் இறந்தனர்; 22௨ பேர் காயம் அடைந்தனர். பாக்.,கின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரில், நேற்று காலை, 35 போலீசார் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குண்டு வெடித்ததில், போலீஸ் வாகனம் துாக்கி எறியப்பட்டது. இதில், ஏழு போலீசார் இறந்தனர்; 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

மூலக்கதை