விரைவில் நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.க.வினர் மாற்றிவிடுவார்கள் – மம்தா பானர்ஜி

என் தமிழ்  என் தமிழ்
விரைவில் நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.க.வினர் மாற்றிவிடுவார்கள் – மம்தா பானர்ஜி

நாட்டின் பெயரைக் கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

விரைவில் நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.க.வினர் மாற்றிவிடுவார்கள் – மம்தா பானர்ஜி

நாட்டின் பெயரைக் கூட பாஜகவினர் நமக்குத் தெரியாமல் மாற்றிவிடுவார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹால் குறித்து பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அளித்த பதிலில் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

இது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கொள்கை. தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு நாட்டின் நினைவுச் சின்னத்தை எப்படி மதத்தின் பெயரால் அந்த நாட்டின் வரலாற்றில் இருந்து பிரிக்க முடியும். மிகவும் தவறான பாதையில் பா.ஜ.க பயணிக்கிறது. இங்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி. பலதரப்பட்ட மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் தற்போது இந்தக் கருத்து தேவையற்றது. இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களை நாம் விலக்கி வைக்கவேண்டும்.

பா.ஜ.க.வினரை பற்றி குறைவாக பேசுவதே நல்லது. அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அதற்கு பதிலாக பிரச்னையை தூண்டும் வகையில் நடந்துகொள்கின்றனர். வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூடிய விரைவில் நமக்குத் தெரியாமல் நமது நாட்டின் பெயரைக் கூட பா.ஜ.க.வினர் மாற்றிவிடுவார்கள்.

இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை