அமெரிக்காவுடன் மோதல் முற்றுகிறது அணு ஆயுதப்போர் எந்த நேரத்திலும் வெடிக்கும்: ஐநா சபையில் வடகொரியா மிரட்டல்

தினகரன்  தினகரன்

ஐநா: அமெரிக்காவுடன் மோதல் முற்றி வருவதை முன்னிட்டு எந்த நேரத்திலும் அணு ஆயுதப்போர் வெடிக்கும் என்று ஐநா சபையில் வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.ஐநா சபையில் வடகொரியா சார்பில் துணை தூதர் கிம் இன் யாங் கலந்து கொண்டார். அப்போது  அவர் வடகொரியா நிலை குறித்து கூறியதாவது:ஐநா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து விதித்து வரும் தடையால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது. எந்த நேரத்திலும் ஒரு அணு ஆயுதப்போர் வெடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அணுஆயுதங்களை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் ராணுவ பயிற்சி எங்கள் பகுதியில் நடக்கிறது. அமெரிக்காவின் இந்த பயிற்சி எதற்கு என்றால் எங்கள் நாட்டின் தலைமை பீடத்தில் முழு அதிகாரத்துடன் இருப்பவரை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான். அதை எல்லாம் சமாளிக்கத்தான் தற்போது அணு ஆயுதத்தின் அத்தனை நிலைகளையும் நாங்கள் எட்டியிருக்கிறோம். அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அணுஆயுத ஏவுகணை ஆகியவற்றை தயாரித்து வெற்றிகரமாக சோதித்து முடித்து இருக்கிறோம். ஒட்டுமொத்த அமெரிக்காவின் நிலப்பரப்பும் எங்கள் தாக்குதல் இலக்கில் உள்ளன. எங்கள் பகுதியில் தொடர்ந்து அமெரிக்கா அத்துமீறலை நடத்தி வந்தால், எங்களுடைய கடும் தண்டணையில் இருந்து  தப்ப முடியாது. அணு ஆயுதங்கள், அணு ஆயுத ஏவுகணைகள் எங்கள் நாட்டின் சொத்து. அதை அழிக்கவோ அல்லது தயாரிப்பதை நிறுத்தவோ முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.ரஷ்யா குறைத்ததுரஷ்ய அதிபர் புதின் கூறுகையில்,”ஐநா தடை விதித்ததை முன்னிட்டு வடகொரியாவுடனான பொருளாதார மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து உறவுகளும் குறைத்துக்கொள்ளப்பட்டுவிட்டன” என்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன் கூறுகையில்,” முதல் குண்டு வீசப்படும் வரை வடகொரியா பிரச்னையை தீர்க்க தூதரக ரீதியிலான முயற்சிகள் தொடரும்” என்றார்.

மூலக்கதை