இந்த நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்த நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்!

உலகின் முக்கிய நகரங்கள் எல்லாம் டெல்லியில் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்கள் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது.  ஐ.நா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.
 
இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள்? அவர்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது ? அவர்களின் கல்வி நிலை எப்படி இருக்கிறது? அவர்கள் எந்த வகையில் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்? மேலும் அந்தப் பகுதியில் பெண்கள் இதற்கு முன் எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
இதனடிப்படையில் இந்த நிறுவனம் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்தது.  ஐ.நா சபையின் முதல் 19 பெரு நகரங்களின் பட்டியலில் டெல்லியும் இருப்பதால் இந்த நிறுவனம் டெல்லியையும் ஆய்வு செய்தது. அங்கு நிலவி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், பெண்களின் நிலையையும் இது ஆய்வு செய்தது. தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கின்றது. முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெரோவும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியும், மூன்றாம் இடத்தில் காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷாவும் இருக்கின்றது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் டெல்லியும் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டோக்கியோ உலகிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை