சவுதியில் பெண்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமம்: சர்வதேச நாடுகள் வரவேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சவுதியில் பெண்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமம்: சர்வதேச நாடுகள் வரவேற்பு

ரியாத்: சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கவும், ஓட்டுநர் உரிமம் அளிக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சவுதியில் கடந்த 1990ம் ஆண்டு முதல் பெண்களை கார் ஓட்ட அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்தன. ேமலும் ஓட்டுநர் உரிமம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.

இதற்கிடையில் பெண்கள் உரிமை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு படிப்படியாக மேற்கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக முக்கிய அரங்கம் ஒன்றில் பெண்களும் அமர்வதற்கு அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது.

அதே போல் 2015ம் ஆண்டு முதல் பெண்கள் அந்நாட்டு தேர்தலில் ஓட்டு போடவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது நீண்ட கால கோரிக்கையான பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதியும், ஓட்டுநர் உரிமம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை வருகிற 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பான உத்தரவை நேற்று சவுதி மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக சவுதி அரசின் அதிகாரப்பூர்வ நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி அளிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அளிக்க அளிக்க கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

30 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டை நவீனப்படுத்தும் பெண்களின் கோரிக்கைகளை சவுதி அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

தற்போது சவுதி மன்னரின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச நாடுகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை