பாக் வெளியுறவு ஆலோசகர் நீக்கம் பிரதமரின் நடவடிக்கையை ஏற்க ராணுவம் மறுப்பு

தினகரன்  தினகரன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் என்ற பத்திரிகை கடந்த அக்டோபர் மாதம்  கட்டுரையாளர் ஒருவர் எழுதிய ெசய்தியை வெளியிட்டிருந்தது. அதில்,  பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாக ராணுவத்தினருக்கும்  அரசு உயர் அதிகாரிகளுக்கும் முரண்பட்ட கருத்து இருப்பதாக  கூறப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை கசிய  விட்டது தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அமீர் ராஜா கான்  தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. பிரதமர்  நவாஷ் ஷெரீப்பின் வெளியுறவுத்துறை சிறப்பு ஆலோசகர் தாரிக் பதாமி(72)  தகவலை கசிய விட்டது. விசாரணையில் உறுதியானது. இதையடுத்து பதாமி மீது நடவடிக்கை எடுக்க  பிரதமருக்கு அந்த குழு பரிந்துரை செய்திருந்ததை ஏற்று தாரிக் பதாமியை பதவி நீக்கம் செய்ய பிரதமர் நவாஸ்  ஷெரீப் உத்தரவிட்டார். பிரதமரின் இந்த முடிவை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. பதவி நீக்க உத்தரவை  பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அடுத்த சில மணிநேரத்தில் பிரதமரின் முடிவை ராணுவம் நிராகரித்து விட்டது. பிரதமரின் நடவடிக்கை முழுமை பெறவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை