வடகொரியா விடயத்தில் அமெரிக்காவின் அதிரடி முடிவு!

PARIS TAMIL  PARIS TAMIL
வடகொரியா விடயத்தில் அமெரிக்காவின் அதிரடி முடிவு!

 அமெரிக்காவின் கண்டனத்தை மீறி அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியாவுக்கு அதிகளவிலான போர் கப்பல்களையும், கடற்படை பயிற்சிக்கான ஆட்களையும் அனுப்ப அமெரிக்க முடிவு செய்துள்ளது.

 
வட கொரியா தொடர்ந்து நடத்தும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, சீனா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
 
இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இனியும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் போரை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
 
ஆனால் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா நேற்று மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியது
 
ஆனால் இந்த சோதனை மிக பெரிய தோல்வியில் முடிந்தது.
 
இனியும் வட கொரியாவின் செயலை பொருத்த கொள்ள முடியாது என கூறும் வகையில் அமெரிக்கா ராணுவம், புதிய கடற்படை பயிற்சிகள் மற்றும் அதிகமான போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பற்படை வட கொரியாவில் ஏவுகணைத் தாக்குதலை எதிர் நோக்கியுள்ள இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இதனிடையில், டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், சீனா மற்றும் அதன் மரியாதைக்குரிய ஜனாதிபதியின் விருப்பத்தை மீறி வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
 
ஆனாலும், அது தோல்வி அடைந்துள்ளது என கூறியுள்ளார்.

மூலக்கதை