பிரேசிலில் அதிபர் மைக்கேல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போரட்டம்: போலீசார் போராட்டக்காரர்கள் இடையே மோதல்

தினகரன்  தினகரன்

பிரேசில்: பிரேசில் நாட்டில் அதிபர் மைக்கேல் டெமரின் தலைமையிலான அரசை கண்டித்து பல்வேறு தொழில் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தம் போராட்டம் வெடித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் பிரதான நகரங்களில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர். விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியது இந்த வேலை நிறுத்தம் பிரேசிலின் பெரும்பாளான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை