வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்கத் தடுப்பு மையம்: அமெரிக்கா தகவல்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியாவில் தான் நிறுவியுள்ள ஏவுகணை தடுப்பு மையம் ஒரிரு தினங்களில் செயல்படுத்த துவங்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான ராணுவ காமாண்டோ அட்மிரல் ஹாரி ஹாரிஸ்இதை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் எடுத்துவரும் அணு ஆயுத மிரட்டல் உண்மையாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் கூறினார். அமெரிக்காவை காப்பாற்ற உலகிலேயே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை தடுப்பு மையத்தை அமைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேற்கு பசிபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல் மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் திறன் தமது படை பிரிவுக்கு உண்டு எனவும் ஹாரி ஹாரிஸ் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை