பேஸ்புக் லைவில் கொலை செய்யப்பட்ட 11 மாத குழந்தை!

PARIS TAMIL  PARIS TAMIL
பேஸ்புக் லைவில் கொலை செய்யப்பட்ட 11 மாத குழந்தை!

 தாய்லாந்தில் நபர் ஒருவர் தனது 11 மாத குழந்தையை கொல்லும் வீடியோவை பேஸ்புக் லைவ்வில் காட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
தாய்லாந்தின் பாங்காக்கில் வசித்து வந்தவர் ஊட்டிசன் வோங்டாலே.
 
கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஊட்டிசன் நேற்று மாலை 5 மணியளவில் பேஸ்புக்கிலிருந்து லைவ் வீடியோ ஆன் செய்துள்ளார்.
 
அதில் மாடியிலிருந்து தன்னுடைய 11 மாத குழந்தையை கீழே போட்டுள்ளார்.
 
தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலானதை தொடர்ந்து பலரும் ரிப்போர்ட் செய்துள்ளனர்.
 
இருவரின் சடலத்தையும் கைப்பற்றியுள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

மூலக்கதை