சீனாவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல்

தினமலர்  தினமலர்
சீனாவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல்

பெய்ஜிங்: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை சீன அரசு நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

தெற்கு சீன கடல் பகுதியில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இதற்கு, புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ் தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் போட்டி போடுகின்றன. இதுதவிர, வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் போக்கு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளத. எனவே தெற்கு சீன கடல் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீன அரசு கடினமாக முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ஏராளமான ராணுவ நடவடிக்கைகளையும மேற்கொண்டு வருகிறது.

சீனாவிடம் ஏற்கனவே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது. ஆனால், இந்த கப்பலை, 1998 ம் ஆண்டு உக்ரைன் அரசிடம் இருந்து சீனா வாங்கியது. இதன் பிறகு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் புதிய விமானம் தாங்கி போர்க்கப்லை உருவாக்கும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. அந்த கப்பலை தான் தற்போது நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது. எனினும், இந்த கப்பல் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகளாகும் என சீன அரசு தெரிவித்துள்ளது. இதுவிர மேலும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலையும் அந்நாட்டு அரசு தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய கப்பல், 50 ஆயிரம் டன் எடை கொண்டது. சீனாவின் ஜெ - 15 ரக போர் விமானங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது.

மூலக்கதை