அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை

சியோல்- அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என வட கொரியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து 5 முறை அணு  ஆயுத சோதனையை வடகொரிய அரசு நடத்தியது. இந்த சூழலில் வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா தனது கடற்படையை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பியது.

கடந்த 2 தினங்களுக்கு முன் வடகொரியா மறுபடியும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தபோதும், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த சூழலில் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹான் சங் ரையோல், அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது முழு அளவிலான போராக உருவெடுக்கும். இனி நாங்கள் ஒவ்வொரு வாரமும் திட்டமிட்டு ஏவுகணை சோதனை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றால் அணு ஆயுதம் மூலம் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஆசிய பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

.

மூலக்கதை