அமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை தேர்தலில் போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு இமெயில் உருவாக்கிய தமிழர் சிவா அய்யாத்துரை தேர்தலில் போட்டி

நியூயார்க்- அமெரிக்காவில் விரைவில் வர உள்ள செனட் சபை உறுப்பினர் பதவி தேர்தலில் இ மெயிலை உருவாக்கிய சிவா அய்யாத்துரை போட்டியிடுகிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

இதை தொடர்ந்து பல்வேறு அரசு பதவிகளுக்கும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அடுத்த ஆண்டு அமெரிக்காவின் உயரிய அமைப்பான செனட் சபைக்கு தேர்தல் வர உள்ளது.

இந்த தேர்தலில் இமெயிலை உருவாக்கிய பெருமை பெற்ற தமிழரான சிவா அய்யாத்துரை போட்டியிடுகிறார். சிறு வயதிலேயே அமெரிக்கா சென்று விட்ட சிவா அய்யாத்துரை அங்கு வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவின் முன்னணி இளம் தொழில் அதிபர்களில் ஒருவராக சிவா அய்யாத்துரையும் விளங்கி வருகிறார். இந்த சூழலில் அடுத்த ஆண்டு அமெரிக்காவின் செனட் சபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் குடியரசுக் கட்சியின் சார்பில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிவா அய்யாத்துரை போட்டியிட முடிவு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எலிசபெத் வாரென்னை எதிர்த்து அவர் களமிறங்க இருக்கிறார்.

அமெரிக்கா வாய்ப்புகளுக்கான தேசம் என தனது அரசியல் பிரவேசம் குறித்து சிவா குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை