குவீன்ஸ்லாந்தை புரட்டி போடும் 'டெபி' புயல்

தினமலர்  தினமலர்

சிட்னி: 'டெபி' புயல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கரையை கடந்தது.இதனால் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.வானிலை ஆய்வு மையத் தகவலின்படி போவென், ஏர்லி கடற்கரைப்பகுதிகளை அது கடக்கும் போது மணிக்கு 270 கிமீ வேகத்தில் கடும் காற்று வீசும்.குவீன்ஸ்லாந்தை 'டெபி' புயல் தாக்கி வருகிறது. கடும் மழையும் பெய்து வருகிறது. இன்று மதியம் வரை இந்தப் புயல் அமைப்பு, காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறாது, புயல் முழுதும் கரையைக் கடப்பதற்கு 6 மணி முதல் 14 மணி நேரம் வரை ஆகும்.அதன் பிறகுதான் மோசமான விளைவு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் அங்கு இன்னமும் பதற்றம் நிலவி வருகிறது.

மூலக்கதை