ஓடும் கார் மீது மின்னல் தாக்கியது

தினமலர்  தினமலர்
ஓடும் கார் மீது மின்னல் தாக்கியது

புதுடில்லி: மெராக்கோ நாட்டில், சாலையில் ஓடிய கார் மீது மின்னல் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட ஆப்ரிக்க பகுதியில் உள்ள மெராக்கோ நாட்டில், சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. இதனால், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. காரை ஒட்டிச் சென்ற டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு காரை நிறுத்தி உள்ளார். எனினும், அதற்குள் காரின் பின் பகுதியில் இருந்து புகை வர துவங்கியது.

காரில் இருந்தவர்கள் கீழே இறங்கிய சில வினாடிகளில் முழு காரும் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ பதிவு காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மூலக்கதை