6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி

தினமலர்  தினமலர்
6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்காவில் சிரியா, லிபியா உள்ளிட்ட 6 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடைவிதித்ததற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிகழும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 6 இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் கடந்த ஜனவரி(2017) மாதம் அறிவித்தார்.இதையடுத்து டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

அக்டோபரில் இறுதி முடிவு


இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் அரசு இந்த ஆணையை அமல்படுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அக்டோபர் மாதம் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கினால் அடுத்த 72 மணி நேரத்தில் தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

மூலக்கதை