ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ராக்கெட்டில் பொருத்தப்படும் இயந்திரத்தை வடகொரியா சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

ஐநா எச்சரித்தும், பொருளாதார தடைவிதித்தும் எவ்வித பயனும் இல்லை. தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் விதமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் வடகொரியா அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ராக்கெட்டில் பொருத்தப்படும் இயந்திரத்தை வடகொரியா நேற்று சோதித்து பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன்மூலம், மீண்டும் அணு ஆயுத சோதனை செய்ய வடகொரியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.   இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சர்வதேச விதிமுறைகளை மீறி மீண்டும் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டால் வடகொரியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை