2024-ல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும்: ஐ.நா., கணிப்பு

தினகரன்  தினகரன்

ஐநா: 2024ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐ.நா., தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது சீன மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 134 கோடியாகவும் உள்ளது. இது உலக மக்கள் தொகையில் முறையே 19 மற்றும் 18 சதவீதமாகும். அடுத்த 7 வருடத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்தும். 2024ல் இரு நாடுகளின் மக்கள் தொகை தலா 144 கோடியாக இருக்கும். இதன் பின்னர் தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய மக்கள் தொகை 2030ல் 150 கோடியாகவும், 2050ல் 166 கோடியாகவும் இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 2030 வரை நிலையாகவும் இருக்கும். இதன் பின்னர் குறைய துவங்கும். ஆனால் இந்திய மக்கள் தொகை 2050க்கு பிறகே குறைய துவங்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உலகளவில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். முன்னதாக இந்திய மக்கள் தொகை 2022ல் சீனாவை தாண்டும் என கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை