பூமியில் விண்கல் மோதினால்...: விஞ்ஞானி எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
பூமியில் விண்கல் மோதினால்...: விஞ்ஞானி எச்சரிக்கை

டப்ளின்: இன்றைய நிலையில் விண்கல் மோதினால் பெரிய நகரங்கள் அழிவதுடன் ஏராளமான மக்கள் பலியாக வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அயர்லாந்தின் குயின் பல்கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர் ஆலன் பிட்சிமன்ஸ் கூறியதாவது: பூமிக்கு அருகில் பல விண்கற்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருவது முக்கியமானது. இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இதுவரை, 1800 அபாயகரமான விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. இவற்றில் பலவற்றால் எந்த பிரச்னையும் இல்லை. அபாயகரமான விண்கற்களை எதிராக நாம் ஏதாவது செய்யாவிட்டால், அவற்றால், அழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை