தடை அதை உடை: நாய்கறி திருவிழாவுக்கு அலைமோதிய மக்கள் படை

தினகரன்  தினகரன்

பீஜிங்: சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடைபெறுவதும் அதற்காக பல ஆயிரக்கணக்கான நாய்களை கொன்று விதவிதமான உணவை தயாரித்தும் வழக்கம். ஆனால் சமூக அமைப்புகள் மற்றும் விலங்கியல் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கறி திருவிழா நடத்த  சீன அரசு தடை விதித்திருந்தது.ஆனாலும் நேற்று  தடையை மீறி சீனாவில் பல இடங்களில் நாய்கறி திருவிழா நடைபெற்றது. நாய்களை கொன்று அதன் கறிகளை வைத்து விதவிதமான உணவு தயாரித்து காட்சிக்கு வைத்து இருந்தனர். இறைச்சி கடைகளிலும் ஏராளமான நாய்களை கொன்று தொங்கவிட்டு இருந்தனர்.

மூலக்கதை