டாய்லெட் பிரஷ்க்கு பதில் கணவனின் டூத் பிரஷ் வைத்து கழிவறையை சுத்தம் செய்த மனைவி கொலை

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் யூஜின் மேல்ப்ளோவர் என்பவர் தனது மனைவியை  டூத் பிரஷ் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது \'யூஜினின் மனைவி  அவரது பயன்படுத்தும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்திருக்கிறார் என்றும் இதனை அறிந்த யூஜின், கோபம் அடைந்த அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தொண்டையில் தாக்கி,  மனைவியின் பல்லை பலமுறை கழிவறையில் அடித்து கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. உடல் பரிசோதனை செய்ததில் மனைவின் உடலில் 126 இடங்களில் காயம் இருந்ததாகவும், அந்த காயங்கள்  டூத் பிரஷால் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மூலக்கதை