5 வயது சிறுமிக்கு 6 வயது நண்பருடன் திருமணம்: கண்ணீரில் மூழ்கிய உறவினர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
5 வயது சிறுமிக்கு 6 வயது நண்பருடன் திருமணம்: கண்ணீரில் மூழ்கிய உறவினர்கள்!

ஸ்காட்லாந்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு அவரது நெருங்கிய 6 வயதான நண்பர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்து சிறுமியின் கனவை நிறைவேற்றியுள்ளனர் பெற்றோர்கள்.
 
ஃபோரெஸ் பகுதியை சேர்ந்த 5 வயாதான சிறுமி எய்லெய்த் பாடர்சன் புற்றுநோய் தாக்கி தனது வாழ் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதனை சிறுமியின் பெற்றோர்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
 
சிறுமியின் நெருங்கிய நண்பரான 6 வயதே ஆன ஹரிசன் க்ரியர் திருமணம் செய்து வைத்து சிறுமியின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர். இந்த திருமணத்துக்கு இரு வீட்டினர் உட்பட 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
 
இந்த திருமண நிகழ்வின் போது பலரும் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் நனைந்தனர். அந்த 5 வயது சிறுமி நியூரோபிளாஸ்டோமா என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஒவ்வொரு நிமிடமும் சிறுமி மரணத்துடன் போராடி வருகிறார்.
 
வரும் சனிக்கிழமை சிறுமிக்கு இரத்தம் மாற்றுதல் தொடர்பான சிகிச்சை இருப்பதால், அதற்கு முன்னதாக நேற்றே சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றி தனது நண்பர்களுடன் சந்தோசமாக இருக்க செய்துள்ளனர் பெற்றோர்கள்.
 

மூலக்கதை