பிரிட்டன் ராணியின் கணவர் 'அட்மிட்'

தினமலர்  தினமலர்
பிரிட்டன் ராணியின் கணவர் அட்மிட்

லண்டன்: பிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத்தின் கணவர், பிலிப், 96, உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத், 91. இவரது கணவர் பிலிப், 96. இரண்டாம் எலிசபெத்துக்கும் பிலிப்புக்கும், 1947ல், திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, இளவரசர் சார்லஸ், இளவரசி ஆன், இளவரசர் ஆன்ட்ரூ, இளவரசர் எட்வர்ட் என, நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நோய் தொற்று காரணமாக, மருத்துவமனையில் பிலிப் சேர்க்கப்பட்டதாகவும், அவர் இப்போது, நலமாக உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தேர்தல் முடிந்து, பார்லிமென்ட், நேற்று முதல் முறையாக கூடியது. இதை துவக்கி வைக்க, ராணி எலிசபெத்துடன், பிலிப் செல்வார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் பிலிப் சேர்க்கப்பட்டுள்ளதால், இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மகனான, இளவரசர் வில்லியம்ஸ், பாட்டி எலிசபெத்துடன் பார்லிமென்டிற்கு சென்றார்.

மூலக்கதை