இஸ்ரேலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கையை உதறிய மனைவி மெலினா

தமிழ் முரசு  தமிழ் முரசு
இஸ்ரேலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கையை உதறிய மனைவி மெலினா

டெல்அவிவ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கையை அவரது மனைவி மெலினா பொது இடத்தில் வைத்து உதறிய சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் தனது மனைவி மெலினாவுடன் வெளிநாட்டு சுற்றுபயணம் செய்து வருகிறார்.

சவுதி அரேபியா சென்ற டிரம்ப் பின்னர் அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். டெல் அவிவ் நகருக்கு வந்த டிரம்ப்-மெலினா தம்பதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அழைத்து சென்றனர்.

அப்போது உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இவர்கள் மீது வெளிச்ச வெள்ளத்தை பாய்ச்சி உற்று கவனித்து கொண்டிருந்தன. அப்போது நான்கு பேரும் நடந்து வந்து கொண்டிருந்த போது யதேச்சையாக மனைவி மெலினா கையை பற்றுவதற்காக டிரம்ப் நீட்டினார்.

ஆனால் பொது இடம் என்று கூட பார்க்காமல் டிரம்பின் கையை மெலினா தட்டி விட்டார்.

ஊடகங்களுக்கு இது போதா? இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் வைரலாக பரவியது. டிரம்புக்கும் மெலினாவுக்கும் இடையில் ஏதோ கசமுசாவாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை