அமெரிக்க உளவாளிகளை கொன்ற சீனா

தினமலர்  தினமலர்
அமெரிக்க உளவாளிகளை கொன்ற சீனா

வாஷிங்டன்: கடந்த 2010ம் ஆண்டு முதல் சிலரை அமெரிக்க உளவாளிகளை சீனா கொன்றதுடன் பலரை சிறையில் அடைத்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த நூற்றாண்டில் உளவுத்துறை விதிமீறல் கவலையளிக்கிறது. சி.ஐ.ஏ.,வில் உள்ள சிலர் அமெரிக்காவை ஏமாற்றியுள்ளனர். வெளிநாட்டில் உள்ள உளவாளிகளுடன் பேச பயன்படுத்தும் சாதனத்தை சீனா முடக்கியுள்ளது. கடந்த 2010 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் சீனாவில் உளவு பார்த்த சில சி.ஐ.ஏ., அதிகாரிகளை கொன்றுள்ளது. உளவுபார்த்ததாக 3 பேரை பிடித்த சீனா, அவர்களில் ஒருவரை, மற்ற இருவர் முன் சுட்டு கொன்றது. இதன் மூலம், சி.ஐ.ஏ.,வுக்காக பணிபுரிந்தால் தண்டனை தரப்படும் என்ற செய்தியை பரப்ப அந்நாடு முயற்சி செய்தது. பலரை பிடித்து சிறையில் அடைத்துள்ளது. 18 முதல் 20 வரையிலான சி.ஐ.ஏ., அதிகாரிகளை சிறையில் வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை