இலங்கையில் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கையில் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு

கொழும்பு: இலங்கையில் ஐநா சார்பில் நடைபெற்ற சர்வதேச புத்த விசாக மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்றிருந்தார். அங்கு அவர் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், மலையக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கண்டி பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதையொட்டி பிரதமர் மோடி பயணம் செய்வதற்காக எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்டியில் அது தரையிறங்கியது.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி புறப்பட முயன்ற போது அஸ்கிரியா மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக புறப்பட முடியாமல் முரண்டு பிடித்தது.

இதையடுத்து இலங்கை கடற்படை உதவியுடன் ஹெலிகாப்டரில் உள்ள கோளாறு கண்டறியப்பட்டது.

இதற்கான உதிரிபாகங்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. இதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அங்கிருந்து கிளம்பி இந்தியா திரும்பினார்.

இலங்கையில் கண்டி, திகோயா உள்ளிட்ட அங்குள்ள பகுதிகளுக்கு மோடியின் பயணத்தின் போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகக்து.

.

மூலக்கதை