ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார் ஹபீஸ் சயீத்: பாக். மழுப்பல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார் ஹபீஸ் சயீத்: பாக். மழுப்பல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா. இதன் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்.

இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். தற்போது லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த அமைப்பின் அரசியல் பிரிவான ஜமாத்- உத் தவா என்ற பெயரில் அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் தடைகளை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்கா மிரட்டியது. இதையடுத்து ஹபீஸ் சயீத் மற்றும் அவனது முக்கிய கூட்டாளிகள் 4 பேர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இதை எதிர்த்து ஹபீஸ் சயீத் தரப்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்சல்கான் உள்பட 3 நீதிபதிகள் அடங்கிய நீதித்துறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, காஷ்மீருக்காக குரல் கொடுப்பதால் அதை தடுப்பதற்காக இந்தியாவையும், அமெரிக்காவையும் திருப்தி படுத்த பாக்.

அரசு செயல்படுகிறது சயீத் வக்கீல் குற்றம் சாட்டினார். இதை மறுத்த பாக்.

தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் வாதிடுகளையில், ஜிகாத் என்ற பெயரில் ஹபீஸ் சயீத் உள்ளிட்டோர் தீவிரவாதத்தை பரப்பி வருகின்றனர். அதனால் தான் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார்.

கைது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை