நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் : பஞ்சாப்பில் கெஜ்ரிவால் ...

தினத்தந்தி  தினத்தந்தி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் : பஞ்சாப்பில் கெஜ்ரிவால் ...


சண்டிகார்:
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும்கட்சியான ஆகாலிதளம் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதே நேரத்தில் ஆம்ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் செல்வாக்காக உள்ளது. அவர்களும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.
இங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த கட்சியின் தலைவர் அரவிந்த்கெஜ்ரிவால் சண்டிகாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல் ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஊழல் நடந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரும், அவரது குடும்பத்தினரும் ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளனர்.இதேபோல அனைத்து மந்திரிகளும் ஊழல் செய்து ஏராளமான சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள். அனைத்து ஊழலுக்கும் முதல்-அமைச்சர் தான் காரணம்.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தால்  சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்படும். இதன் மூலம் முதல்-அமைச்சர் குடும்பத்தினர் ஊழல் செய்து சேர்த்த ஒரு பைசாவை கூட விடமாட்டோம். அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். இதேபோல ஊழல் மந்திரிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம்.இத்துடன் ஊழல் செய்த அனைவரையும் சிறையில் தள்ளுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை