கரன்சி தட்டுப்பாடு விவகாரம் - பார்லி.யில் இன்றும் அமளி ; இரு அவைகளும் ஒத்திவைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கரன்சி தட்டுப்பாடு விவகாரம்  பார்லி.யில் இன்றும் அமளி ; இரு அவைகளும் ஒத்திவைப்பு



புதுடெல்லி, -நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றும் கரன்சி தட்டுப்பாடு விவகாரத்தை கிளப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி அதிரடியாக அறிவித்தது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மக்கள் அந்த நோட்டுகளை மாற்றி வந்தனர். வங்கிகளில் அவற்றை டெபாசிட் செய்ய காலக்கெடு வருகிற 30ம் தேதியோடு முடிவடைகிறது.

இதற்கிடையே, புதிய கரன்சிகள் முழு அளவில் வராததால், பண தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



கடந்த  மாதம்16ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த இரண்டு வாரங்களாக கரன்சி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவைகளும் முற்றிலுமாக முடங்கின.

இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை வழக்கம் போல மக்களவை, மாநிலங்களவை ஆகியவை காலை 11 மணிக்கு கூடின. இரு அவைகளிலும், ‘‘கரன்சி விவகாரத்தில் எதிர்கட்சிகளை அவமதித்து பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கூறி, எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

.

மூலக்கதை