காஷ்மீரில் அமைதி காக்க நரேந்திர மோதி வேண்டுகோள்

BBC  BBC
காஷ்மீரில் அமைதி காக்க நரேந்திர மோதி வேண்டுகோள்

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் காஷ்மீரில் வன்முறை வெடித்ததற்கு பிறகு முதல் முறையாக அவர் இம்மாதிரியான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா காஷ்மீரை விரும்புகிறது என்றும் ஆனால் அங்குள்ளவர்கள் அதற்கு நிறைய தீங்கு விளைவிக்கிறார்கள் என்றும் மோதி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்திய குடிமகன் அனுபவிக்கும் சுதந்திரம், காஷிமீரை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமாகும் என தெரிவித்துள்ளார்.

இந்திய படைகள் காஷிமீரின் முக்கிய தீவிரவாத தலைவரை சுட்டுக் கொன்றதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

இந்திய நிர்வாகத்தை எதிர்க்கும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், ஊரடங்கு உத்தரவையும் மீறி பாதுகாப்பு படையினரிடம் மோதலில் ஈடுட்டு வருகின்றனர்.

டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து மவுனம் காத்ததாக, மோதியின் மீது விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை