வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட அசாம் யானையை மீட்கும் முயற்சியில் தொய்வு

BBC  BBC
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட அசாம் யானையை மீட்கும் முயற்சியில் தொய்வு

ஒரு மாதத்திற்கு முன்பு வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட யானையை மீட்கும் முயற்சிகளை கிராம மக்கள் கூட்டமாகக் கூடி நிற்பது தடுப்பதாக பங்களாதேஷ் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் யானை இந்திய மாநிலம் அசாமில் ஜூன் மாதம் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட பலத்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பங்களாதேசை அடைந்தது.

வெள்ளம் சூழ்ந்திருந்த வடக்கு பங்களாதேஷில் 100 கிலோமீட்டருக்கு மேலாக இந்த யானை பயணித்துள்ளது.

இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்கு அதை ஒரு ஈரம் காய்ந்த மேட்டு நிலப் பகுதிக்குக் கொண்டுவர பங்களாதேஷ் மற்றும் இந்திய வனஉயிர் நிபுணர்கள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஆனால் ஆயிரக்கணக்காக பார்வையாளர்கள் அங்கு தொடர்ந்து இருப்பதால் யானையை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் முயற்சி தாமதப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

மூலக்கதை