அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்: அம்பலப்படுத்திய நோயாளி (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்: அம்பலப்படுத்திய நோயாளி (வீடியோ இணைப்பு)

டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த Ethel Easter என்ற பெண்மணி குடலிறக்க(hernia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அணுகியபோது, அவரின் அணுகுமுறை இவரை அவமதிக்கும் விதமாக இருந்துள்ளது, மேலும் இவரை பிடிக்காததது போலவே மருத்துவர் நடந்துகொண்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், மருத்துவரிடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளார், அதற்கு மருத்துவர், நீங்கள் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

அதற்கு இவர், இரண்டு மாதங்கள் என்னால் காத்திருக்க இயலாது, அதனால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யலாம் என கூறியுள்ளார்.

அதற்கு மருத்துவர், நீங்கள் யாரென்று நினைத்தீர்கள்? எல்லோரைப்போலவும் நீங்களும் காத்திருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு தயாரானபோது, அறுவை சிகிச்சை செய்கையில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் உரையாடல்களை பதிவு செய்வதற்காக தனது தலைமுடியில், சிறிய அளவிலான ரெக்டாரை(Recorder) மறைத்துவைத்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், அந்த பதிவினை கேட்ட இவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இவர், மருத்துவர் என்னை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டார், மேலும் எனது உடல் அமைப்பினை பற்றி மோசமான கருத்துக்களை சக மருத்துவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அதுமட்டுமின்றி, எனது உடலை தொடுவது தொடர்பான கருத்துக்கள், மேலும் என்னை கிண்டல் செய்வதற்கு கொமடி நடிகரான bill cosby - ஐயும் பயன்படுத்திக்கொண்டார்கள்.

நான் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் எனக்கூறி மருத்துவர்கள் சிரித்துக்கொண்டார்கள், இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேனே தவிர இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார்.

மூலக்கதை