உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
சென்னை,தமிழ்நாட்டில் இப்போது மக்கள் நலத்திட்டங்கள் அதிகமான அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய புதிய திட்டங்களை அறிவித்து மக்களைக் கவர்ந்து வருகிறது. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு அதிகம் செலவாகும். இதனால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரிக்கிறது. தமிழகத்தின் கடன் சுமை தற்போது 10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது என்று காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “அனைத்து மாநிலங்களிலும் தமிழகத்தில்தான் நிலுவையில் உள்ள கடன் தொகை மிக அதிகமாக உள்ளது. 2010-ல், உத்தரபிரதேசத்தின் கடன் தொகை தமிழகத்தின் கடனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தது. இப்போது, தமிழகத்தின் கடன் தொகை உத்தரபிரதேசத்தை விட அதிகமாக உள்ளது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு அடுத்தப்படியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலைகளை விட இன்னும் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.TN has the highest outstanding debt of all statesIn 2010, UP had more than double the debt of TNNow, TN has higher debt than UPTN’s interest burden (%) is 3rd highest after PB & HRTN’s debt/gdp is still much higher than pre-covid levelsTN’s debt situation is alarming! https://t.co/3CzHxWNKJF pic.twitter.com/dmxa4Aj9C2




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
