சொத்து வழக்கு அப்பீல் விசாரணை: அன்பழகன் மனு நிராகரிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மாலை மலர்  மாலை மலர்
சொத்து வழக்கு அப்பீல் விசாரணை: அன்பழகன் மனு நிராகரிப்பு  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, மார்ச். 31–

சொத்து வழக்கு அப்பீல் விசாரணையில் அன்பழகன் தரப்பு வாதம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுத்து விட்டது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து வழக்கு அப்பீல் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கர்நாடக அரசு தரப்பில் வக்கீல் ஆச்சார்யா வாதம் நடத்தினார். அதன் பிறகு மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சுருக்கமாக வாதம் செய்தார்.

இதே போல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வாதம் நடத்த அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று அன்பழகன் வக்கீல் அந்தி அர்ஜுனா தனது வாதத்தை முன் வைக்க எழுந்தார். இதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். அன்பழகன் வக்கீல் வாதம் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வாதம் செய்ய அனுமதிக்க கூடாது என்றார். இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

அன்பழகன் தரப்பில் சொல்ல வருவதை கர்நாடக அரசு வக்கீல் தனது வாதத்தில் ஏற்கனவே விரிவாக விளக்கி விட்டார், அவரது வாதத்தில் புதிதாக எதுவும் இல்லை, திரும்ப திரும்ப ஒரே வாதத்தை கேட்க நாங்கள் தயாராக இல்லை. புதிதாக சொல்ல விரும்பினால் அதை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்று கூறி அன்பழகன் மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை