பெங்களூரில் பிளஸ்–2 வேதியியல் தேர்வு கேள்வித்தாள் அவுட்: மாணவ– மாணவிகள் போராட்டம்

மாலை மலர்  மாலை மலர்
பெங்களூரில் பிளஸ்–2 வேதியியல் தேர்வு கேள்வித்தாள் அவுட்: மாணவ– மாணவிகள் போராட்டம்

பெங்களூர், மார்ச்.31–

பெங்களூரில் பிளஸ்–2 வேதியியல் தேர்வுக்கான கேள்வித்தாள் ‘அவுட்’ ஆனதால் மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தினார்கள்.

கர்நாடக மாநிலத்தில் பிளஸ்–2 தேர்வு நடந்து வருகிறது. கடந்த 21–ந்தேதி பிளஸ்–2 வேதியியல் தேர்வு நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் முன்கூட்டியே கேள்வித் தாள் அவுட் ஆனது. இதனால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த தேர்வு இன்று நடப்பதாக இருந்தது. இதற்காக மீண்டும் புதிதாக வேதியியல் கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய கேள்வித்தாளும் நேற்று இரவு வெளியானது. இதை மாநில சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்து தேர்வுத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தனர்.

சில பேப்பர்களில் வேதியியல் கேள்விகள் கையால் எழுதப்பட்டு இருந்தது. அதை ஒரிஜினல் கேள்வித்தாளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் சரியாக இருந்தது. பேப்பரில் எழுதப்பட்ட கேள்விகள் பல காப்பிகள் எடுத்து விநியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த வேதியியல் மறுதேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

வேதியியல் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாண வர்கள் தேர்வு எழுத வரவேண்டாம் என்று கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மாணவர்களும், பெற்றோர் களும் அதிர்ச்சி அடைந்த னர்.

கேள்வித்தாள் அவுட் ஆனது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பெங் களூர் தலைமை செயல கத்தில் பாதுகாப்பாக கரு வூலத்தில் வைக்கப்பட்டு இருந்த கேள்வித்தாளை அங்கு பணியாற்றிய ஊழியர்கள்தான் திருடி வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாண வர்களும், பெற்றோர்களும் கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்கள். திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் அலுவலக கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத் தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீ சாரும் அதிகாரிகளும் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை