தேர்தல் பிரசார களைப்பில் ரோட்டோர கடையில் டீ குடித்த குஷ்பு
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டம் முடிந்ததும் திருவனந்தபுரத்துக்கு விமானத்தை பிடிப்பதற்காக அவசர, அவசரமாக காரில் புறப்பட்டார்.
இரவு உணவு சாப்பிடாமல் களைப்பில் இருந்த குஷ்பு மார்த்தாண்டம் அருகே சென்ற போது ரோட்டோர டீ கடையில் காரை நிறுத்தி காபி குடிக்க சென்றார்.
கேரளாவில் ‘கட்டஞ்சாயா’ (பால் ஊற்றாத காபி) புகழ் பெற்றது. இதனால் அவர் ‘கட்டஞ்சாயா’ கேட்டார். உதவியாளர்கள் வாங்கி கொடுத்த சாயாவை காருக்குள் இருந்த படியே ருசித்து குடித்தார்.
நள்ளிரவு நேரம் என்பதால் கடையில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனாலும் காருக்குள் குஷ்பு இருக்கிறார் என்பதை அறிந்ததும் கடையில் நின்று கொண்டிருந்த ஒரு சிலர் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர்.
சாயாவை குடித்து முடித்து கண்ணாடி டம்ளரை கொடுத்த குஷ்பு அங்கு நின்றவர்களை பார்த்து சிரித்தபடியே காங்கிரஸ் கூட்டணிக்கு ‘‘வோட் பண்ணுங்க‘‘ என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
