காதலை முன்மொழிய பூங்காவுக்கு சென்ற காதலர்கள்: சாலை விபத்தில் சிக்கிய பரிதாபம்

NEWSONEWS  NEWSONEWS
காதலை முன்மொழிய பூங்காவுக்கு சென்ற காதலர்கள்: சாலை விபத்தில் சிக்கிய பரிதாபம்

அமெரிக்காவில் நெடுநாள் காதல் ஜோடி ஒன்று தங்கள் காதலை முன்மொழிய பூக்கள் சூழ்ந்த பூங்கா ஒன்றை நாடி வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத வகையில் இவர்களின் கார் சாலை விபத்தில் சிக்கியதில் பெண் தோழிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த தோழியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்த அந்த நபர், காயம்பட்ட தோழி நலமடைந்து வந்த நிலையில் மருத்துவனையில் வைத்து தமது காதலை முன்மொழிந்துள்ளார்.

மருத்துவமனை படுக்கையில் தமது தோழி அருகே ஒற்றைக்காலில் நின்றவாறு பெட்டியில் இருக்கும் மோதிரத்துடன் தமது காதலை ஏற்றுக்கொள்ள கூறும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட நபர் இச்சம்பவம் குறித்து தமது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு உடல் நிலை தேறி வருவதாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் திருமண்ந்தான் எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை திரளான மக்கள் பகிர்ந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை